தரநஙக எனபதல கழநதயயத தததடககக கடத?' - நதமனறததல மறயடட பரததக யஷன

சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவரும், இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளருமான திருநங்கை பிரித்திகா யாஷினி அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ``பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். அதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் வெறுமையைப் போக்க, குழந்தையைத் தத்தெடுக்க முடிவுசெய்தேன். அதன்படி, டெல்லியிலுள்ள மத்திய குழந்தைகள் தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

மாணவிகளுடன் கலந்துரையாடிய யாஷினி!

ஆனால், திருநங்கை என்ற காரணத்தால், என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்தும், என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார் பிரித்திகா யாஷினி.

பிரித்திகா யாஷினி

மேலும், ``தத்தெடுப்பதில் சிறார் நீதிச் சட்டம், எந்தப் பாலின பாகுபாட்டையும் காட்டவில்லை. குழந்தையை நல்ல முறையில் வளர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்று மட்டுமே விதிகள் இருக்கின்றன. நான் அரசுப் பணியில் இருப்பதால் குழந்தையை சிறந்த முறையில் என்னால் வளர்க்க முடியும்" எனவும் அவர் தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.

பிரித்திகா யாஷினியின் இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு ஜூன் 30-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/DJbHmY4

Post a Comment

0 Comments