`மன்னர் சார்லஸ் என் தந்தையில்லையா..?' - வதந்திகள் குறித்து நீதிமன்றத்தில் இளவரசர் ஹாரி வேதனை!

இங்கிலாந்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுக்காலமாக ஆண்ட ராணி எலிசபெத் கடந்த செப்டம்பரில் மறைந்ததையடுத்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக சார்லஸ் பதவியேற்றார். அதோடு இந்தக் காலத்திலும் மன்னராட்சி முறை எதற்கு என பொதுமக்களின் ஒரு தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் கோலாகலமாக மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெற்று முடிந்தது. இதற்கிடையில் சார்லஸ் - டயானா ஆகியோரின் மகனும், இளவரசருமான ஹாரி 2018-ல் அமெரிக்க நடிகை மேகனை கரம்பிடித்த பிறகு எழுந்த பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், 2020-ல் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகினார்.

இளவரசர் ஹாரி.

இந்த நிலையில், தற்போது நீதிமன்ற வழக்கு ஒன்றில், தன்னுடைய உண்மையான தந்தை சார்லஸ் அல்ல, தாய் டயனாவுடன் தொடர்பிலிருந்த மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் என்று பரவும் வதந்திகள் தன்னை வேதனைப்படுத்துவதாக ஹாரி கூறியிருக்கிறார்.

மிரர் குரூப் நியூஸ் பேப்பர் லிமிடெட்டுக்கு எதிரான தொலைபேசி ஹேக்கிங் வழக்கில் ஜூன் 6 அன்று நீதிமன்றத்தில் ஹாரி தன்னுடைய சாட்சியத்தில், ``நான் பிறக்கும் வரை மேஜர் ஹெவிட்டை என் அம்மா சந்திக்கவில்லை என்பது எனக்குத் தெரியாது. இந்தக் கதையை இதோடு நிறுத்திவிடுவது நன்றாக இருக்கும். என்னுடைய அம்மா இறந்ததையடுத்து, எனக்கு 18 வயதாக இருந்தபோது இது போன்ற கதைகள் எனக்குள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதை உணர்ந்தேன்.

இளவரசர் ஹாரி

இது போன்ற கதைகளுக்குப் பின்னாலிருக்கும் நோக்கங்களை எப்போதும் நான் கேள்விக்குட்படுத்தினேன். அரச குடும்பத்திலிருந்து நான் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்த செய்தித்தாள்கள் ஆர்வமாக இருந்தனவா?" என்று கூறியிருந்தார்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜேம்ஸ் ஹெவிட் 90-களின் நடுப்பகுதியில் இளவரசர் ஹாரியின் தாயார் டயானாவுடன் தொடர்பிலிருந்தார் என்று கூறப்படுகிறது.



from India News https://ift.tt/bTBvYjI

Post a Comment

0 Comments