மதவத சகதகளடமரநத நடடக ககக ரகல கநத எநத தயகததயம சயவர"- மணககம தகர

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கிறது ரெட்டியபட்டி கிராமம். இங்கிருக்கும் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் சுகந்தி. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செவிலியராக பணியாற்றி வரும் இவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு கைகளினால் செவிலியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நைட்டிங்கேல் விருதினை சமீபத்தில் பெற்றார்.

மாணிக்கம் தாக்கூர் எம்.பி.

இதனை அறிந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ரெட்டியப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர் சுகத்தியை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக ரெட்டியப்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த மாணிக்கம் தாகூர் எம்.பி‌. செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ``மதவாத சக்திகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறார். தமிழகத்தில், கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தி.மு.க, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும்.

நிழற்குடை

பாட்னாவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் சிறப்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெறவிருக்கும் கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை நடத்தி வருகிறது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்காளர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.



from India News https://ift.tt/0SMfXCB

Post a Comment

0 Comments