சிவகங்கை மாவட்டத்தில் பாகனேரி, கத்தப்பட்டு, நகரம்பட்டி ஆகிய மூன்று இடங்களில் வாளுக்கு வேலி மன்னரின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் களப்பணியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.பெரியகருப்பன், "சுதந்திப் போராட்ட வீரர்களையும், மொழிப்போர் தியாகிகளையும் போற்றிப் புகழ்வதில் கலைஞருக்கு நிகரில்லை. அவர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலினும் நினைவுச் சின்னங்களை அமைத்து வருகிறார்.
அந்த வகையில் பாகனேரி வாள்கோட்டை நாட்டில் வாளுக்கு வேலி, மன்னர் மருது பாண்டியருக்கு துணை நின்றதால் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாகி, சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். தற்போது வாளுக்கு வேலி மணிமண்டபம் கட்டுவதற்காக தமிழக முதல்வர் இடம் தேர்வு செய்ய உத்தரவிட்டதன் பேரில் கத்தப்பட்டு, பாகனேரி, நகரம்பட்டி ஆகிய மூன்று இடங்களையும் பார்வையிட்டேன். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இதில் ஒரு இடம் உறுதி செய்யப்படும்" என்றவரிடம், தக்காளி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
"தக்காளி விலை உயர்ந்து வருவதாக அரசின் கவனத்திற்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தற்போது விலை குறைந்து வருகிறது.
தற்போது பிரச்னை தீர்ந்ததுவிட்டது. விலை அதிகரித்து வந்ததால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தினார். எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இரண்டு நாளில் விலை குறைந்து விட்டது. மேலும் படிப்படியாக தக்காளி விலை குறையும்" என்றார்.
from India News https://ift.tt/7SsaqOT
0 Comments