``அண்ணாமலை தகுதிக்கு மீறி பேசுகிறார் என்கிறீர்கள்... அப்படி என்ன பேசிவிட்டார்?”
``பிறந்த ஊரில் கூட மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், முதலமைச்சர் கைது செய்யப்படுவார் எனச் சொல்வது அபத்தமாக இருக்கிறது. அவர் என்ன சி.பி.ஐ இயக்குநரா? அமலாக்கத்துறை இயக்குநரா? பா.ஜ.க-வின் மாநில தலைவர்தானே அண்ணாமலை? அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு 1,000 ரூபாய் கொடுத்தாரா இல்லையா? என சவால் விட்டு கேட்கிறேன். ஊழல் நிறைந்த நபர், அவர் அப்படிப் பேசியது கண்டனத்திற்குரியது”
“தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான மோதல்போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே?”
“இது ஆர்.எஸ்.எஸ்-ஸின் திட்டமிட்ட சதி. எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆள்கிறதோ அங்கெல்லாம் ஆளுநர்களை வைத்து, ஆர்.எஸ்.எஸ் இத்தகைய அரசியல்களை செய்துகொண்டிருக்கிறது. பா.ஜ.க தலைவராக இருப்பவர் செய்ய வேண்டிய பணிகளை, கொள்கை அளவில் ஆளுநர் செய்கிறார். ஆளுநர் மாளிகையை பா.ஜ.க அலுவலகமாக மாற்றிச் செய்யும் இம்முயற்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள்.”
“மணிப்பூருக்கு பிரதமர் செல்லவில்லை என்று தொடர்ச்சியாக கேட்கிறீர்கள்... ஆனால் அமித் ஷா 2 முறை சென்றிருக்கிறாரே?”
``அமித் ஷா பிரதமரா அல்லது மோடி பிரதமரா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் பா.ஜ.க அரசு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது. அமைதியாக இருந்த மணிப்பூரை 20 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளிவிட்டார்கள். மணிப்பூர் குறித்து ஒரு வார்த்தையை கூட பிரதமர் உச்சரிக்கவில்லை. மணிப்பூரில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதி கேட்டும் பிரதமர் அனுமதிக்கவில்லை.”
“ஆனால் மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் மென்மையாக செயல்படுகிறதோ? அரசுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லையே?”
“நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. காங்கிரஸைப் பொருத்தவரையில் இவ்விவகாரத்தில் வெறுப்பு அரசியலை செய்ய விரும்பவில்லை. அங்கு மக்கள் மத்தியில் நிலவும் வெறுப்புணர்வை அணைக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம். இருதரப்போடும் பிரதமர் அமர்ந்து பேசி அன்பை விதைக்க வேண்டுமென்று சொன்னோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை.”
“சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசிக்கலாம் என அரசு கூறுகிறது. ஆனால் எதிர்க்கும் தீட்சிதர்களை பா.ஜ.க ஆதரிக்கிறது. இதில் காங்கிரஸ் யார் பக்கம்?”
"இல்லாத பிரச்னைகளைக் கிளப்பி, உண்மையான மக்கள் பிரச்னைகளை புறந்தள்ளுவதுதான் பா.ஜ.க-வின் வேலை. இதெல்லாம் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல பிடித்த வேலை. பொய்யான, புரட்டான கதைகளைச் சொல்லி எதையாவது செய்யப் பார்ப்பார்கள். மாநில அரசு இவ்விவகாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும்.”
from India News https://ift.tt/F1JMXOs
0 Comments