
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவரின் ஆதரவாளர்களால் கலவரம் ஏற்பட்டது. தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கும் இம்ரான் கான், நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ட்விட்டரின் புதிய சி.இ.ஓ-ஆக நியமிக்கப்பட்டிருக்கும் லிண்டா யக்கரினோ, பதவியேற்ற பிறகு முதல் ட்வீட்டாக, ``ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பார்வையால், நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

வங்கதேசத்தில் `மோச்சா சூறாவளி' தீவிரமடைந்துவருகிறது. அதன் காரணமாக, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

உக்ரைனுக்கு உதவும் வகையில் மூன்று பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது.

இரு நாடுகளுக்கிடையேயான உறவைப் பலப்படுத்தவும், நம்பிக்கையை அதிகரிக்கவும், தாலிபன் தலைவர்களை கத்தார் பிரதமர் சந்தித்திருக்கிறார்.

பல ஆண்டுக்கால கோரிக்கையை ஏற்று போர்ச்சுக்கலில் 18 வயதுக்கு மேற்பட்ட, தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கருணைக் கொலை செய்வதற்கு அந்த நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

உக்ரைன் முன்னிலையில் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய இசைப் போட்டியான `யூரோ விஷன்' டைட்டிலை ஸ்வீடன் வென்றது. ஸ்வீடனைச் சேர்ந்த லொரீன் 25 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு வென்றிருக்கிறார்.

நேபாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்களில் 11 பேர், இமயமலை உச்சியை அடைந்திருக்கின்றனர்.

தெற்காசியத் தடகள போட்டியில் பங்கேற்ற கம்போடியாவைச் சேர்ந்த பொவ் சம்நங், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். போட்டியில் இறுதியாக வந்தபோதிலும், அவரின் துணிச்சலான செயலால் அந்த நாட்டின் பிரதமர் உட்பட அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/681SzED
0 Comments