Tamil News Today Live: சென்னை கடற்கரை, தாம்பரம் வழித்தடம்... மின்சார ரயில் பெட்டிகள் கழன்றதால் சேவை பாதிப்பு!

ரயிலிலிருந்து திடீரென பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு!

ரயில்

சென்னை கடற்கரை, தாம்பரம் வழித்தடத்தில் சைதாப்பேட்டை அருகே புறநகர் மின்சார ரயிலிலிருந்து பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டதால் கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் பாதிப்பை சந்தித்தனர். ரயில் பெட்டிகள் கழன்றது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.



from India News https://ift.tt/MDfal0H

Post a Comment

0 Comments