``உதயநிதி, சபரீசனின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய நிதித்துறை அமைச்சர் வாழ்க” - எடப்பாடி பழனிசாமி

சேலம் மாநகர் மாவட்டக் கழகம் சார்பாக சமீபத்தில் கொண்டலாம்பட்டி பகுதியில் அ.தி.மு.க சார்பாக மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``உழைக்கும் மக்களுக்கு துணையாக இருக்கின்ற கட்சி அதிமுக. எங்கெல்லாம் உழைப்பாளிகள் இருக்கின்றார்களோ, அங்கெல்லாம் அ.தி.மு.க அவர்களுக்கு துணையாக இருந்து பாடுபடுகின்றது. எட்டு மணி நேரம் ஓய்வு எடுத்தால் மட்டுமே, அடுத்த எட்டு மணி நேரம் பணியைச் செய்ய முடியும்.

ஸ்டாலின்

கடந்த சில நாள்களுக்கு முன்னர், தி.மு.க அரசு சட்டமன்றத் கூட்டத்தொடரில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. நான்கு நாள்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும், மூன்று நாள்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியது. திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி இந்த சட்டத்தை எதிர்த்தது. அ.தி.மு.க சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு தமிழக முதல்வர் சட்டத்தை கொண்டு வர துணிச்சல் வேண்டும் என்று கூறுகிறார். தொழிலாளருக்கு நன்மை செய்கின்ற சட்டத்தை கொண்டு வந்தால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. அதன்பின்னர் ஒட்டுமொத்த தொழிலாளர்களும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த சட்டத்தை திரும்ப பெற்றது திமுக.

அதிமுக ஆட்சி ஒரு பொற்கால ஆட்சி, திமுக ஆட்சி எப்பொழுது போகும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் குரலாக உள்ளது. இன்றைய நிதியமைச்சர் முப்பதாயிரம் கோடியை உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு உள்ளனர் என்று அம்பலப்படுத்தி உள்ளார். நிதியமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் வாழ்க..

அளவுக்கு மீறி பணம் வைத்ததிருந்ததால் ஆபத்து வந்துவிட்டது தப்பமுடியாது. அளவுக்கு மீறி அமிர்தத்தை சாப்பிட்டாலும் ஆபத்தாக மாறும், அளவுக்கு மீறி சம்பாதித்தால் இந்த நிலை தான் வரும். ஊழல் ஊழல் என்று பேசி வந்த முதலமைச்சர் வாய் மூடி இருப்பது ஏன்? இதுதொடர்பாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் யாரும் கேட்கமாட்டார்கள், காரணம் அவர்கள் இன்னமும் நிதியமைச்சரின் ஆடியோ கேட்கலேயோ என்னவோ தெரியல.

மக்களுக்கு எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அதிமுக. 30 ஆயிரம் கோடி சுருட்டிவிட்டு இன்றுவரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை, வாய் திறந்து பேச மறுக்கிறார்கள். மடியில் கனம் உள்ளது அதனால் பேச முடியவில்லை, பணம் எங்கு தான் உள்ளது என்று தவறி கூறிவிட்டால் தூக்கி உள்ளே வைத்து விடுவார்களோ என்கிற பயத்தால் தான் யாரும் பேசவில்லை” என்றார்.



from India News https://ift.tt/ftOhvYo

Post a Comment

0 Comments