நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை வேலுமணி,
"தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி 2 மணி நேரம் பேசியும் அது வெளியே வரவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கெட்டுவிட்டது.
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிமவள கடத்தல் நடக்கிறது. தினசரி 4,000 முதல் 5,000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஆனால் திமுக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்துக்கும் அதிக லஞ்சம் பெற்று கனிமங்களை விற்கிறார்கள்.
கனிமவள கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அதிமுக சார்பில் கடுமையாக பேசியுள்ளோம். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசை மக்கள் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் புறக்கணிப்பார்கள்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் புரள்கிறது. ஊடகங்களை மிரட்டுகிறார்கள். 12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு. அதை திரும்பப் பெற்று அதனை சாதனை என்று கூறி வருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் எதிர்த்த பிறகு அந்தத் திட்டத்தை வாபஸ் பெற்றதை சாதனையாக கூறுவது தான் வேதனையாக இருக்கிறது." என்று கூறினார்.
from India News https://ift.tt/2aikNuU
0 Comments