
மூன்றாம் சார்லஸ் முடிச்சூட்டு விழாவில், அரசாட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் 52 பேர் கைதுசெய்யப்பட்டனர். "He is not my king" என்ற கோஷத்துடன் போராடியதால் கைதுசெய்யப்பட்டனர்.
தேடப்பட்டு வந்த காலிஸ்தான் தீவிரவாதி பரம்ஜித் சிங் பஞ்வார் (Paramjit Singh Panjwar), லாகூரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் காலிஸ்தான் கமாண்டோ ஃபோர்ஸ் - பஞ்வார் குழுவைத் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பசிபிக்கின் வனுவாட்டு நாட்டிலுள்ள பழங்குடியினர், பிரிட்டன் அரச குடும்பத்தினரைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அரசர் மூன்றாம் சார்லஸின் முடிச்சூட்டு விழாவிற்காகச் சம்பிரதாய நடனங்கள், பாரம்பர்ய பானம் அருந்தி தங்களுடைய மரியாதையை செலுத்தினர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஷாப்பிங் மாலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், சம்பவ இடத்தில் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

முடிசூட்டப்பட்டிருக்கும் பிரிட்டன் அரசர் சார்லஸ், அரசி கெமிலா ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூரில் விமான நிலைய அதிகாரியாக பணியாற்றிய பிரேம் குமார் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இரானில் 25 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. கோபமடைந்த அவர், விமானத்திலிருந்து குதிக்க முற்பட்டபோது சக பயணிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கிழக்கு காங்கோவில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெள்ளத்தால், 170 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
from India News https://ift.tt/pmIv8EZ
0 Comments