தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் ஏறி, முழுமையாக இரண்டாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் பேரறிஞர் அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``நல்லதை ஏற்று, அல்லதை, கெட்டதை புறந்தள்ளி ஆட்சி செய்துவருகிறேன். நான் ஆட்சி பொறுப்பேற்றபோது இதே இடத்தில் கூறினேன். `இந்த ஆட்சி, எங்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல... ஓட்டு போடதவர்களுக்கும் சேர்த்துதான்.
ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இப்படியான ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் எனது ஆட்சி இருக்கும்' எனக் கூறினேன். அப்படியேதான் ஆட்சி செய்துவருகிறேன் என நினைக்கிறேன். எனவே, எனக்கு எப்படி கடந்த இரண்டு வருடங்களாக ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ, அதேபோல தொடர்ந்து மூன்றாவது ஆண்டிலும் வழங்க வேண்டும் என உங்களிடம் எதிர்பார்க்கிறேன்" என்றார்.
from India News https://ift.tt/VMFGknT
0 Comments