பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்கள் வழங்கியதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உயர் பதவியிலிருக்கும் விஞ்ஞானி ஒருவர் புனேவில் கைதுசெய்யப்பட்டிருக்கும் விவகாரம் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி கைதுசெய்யப்பட்ட பிரதீப் குருல்கர் (60) எனும் இந்த விஞ்ஞானி, புனேவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.
இந்த நிலையில் பிரதீப் குருல்கர், பாகிஸ்தான் ஏஜென்டுகளுடன் வீடியோ காலில் தொடர்பிலிருந்ததாகவும், பல தகவல்களைப் பரிமாறியதாகவும் நேற்று முன்தினம், மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் புனேவில் (Maharashtra Anti-Terrorism Squad) கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாகப் பயங்கரவாத எதிர்ப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ``இதுவொரு ஹனிட்ராப் (honeytrap) விவகாரம். பிரதீப் குருல்கர் தன்னுடைய பணிகளின்போது, பாகிஸ்தான் உளவுத்துறை ஆப்பரேட்டிவ் (Pakistan Intelligence Operative) ஏஜென்ட்டுடன் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகள் மூலம் தொடர்பிலிருந்தார்.
விஞ்ஞானி தன் உயர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். அரசாங்க ரகசியங்கள் எதிரி நாட்டுக்குக் கிடைத்தால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தும், அவர்களுக்கு விவரங்களை அளித்திருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
from India News https://ift.tt/XqVv8j6
0 Comments