தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் மோசடி செய்தாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரம் தொடர்பான வழக்கில், இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை இன்று காலைமுதல் சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கரூர், கோவை உட்பட பல்வேறு இடங்களில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். மேலும், ஹைதராபாத், பெங்களூருவிலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
from India News https://ift.tt/Va0KNlF
0 Comments