ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானம் - சட்டப்பேரவையில் இன்று தாக்கல்?!
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசு, குடியரசுத் தலைவர் ஆகியோரை வலியுறுத்தும் விதமாக தமிழக அரசு இந்த தனி தீர்மானத்தை கொண்டு வருகிறது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, சட்டசபை குறித்தும் தமிழகத்தில் நடைபெற்ற கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் வேண்டும் அவர் கூறிய கருத்துக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் தான் தமிழக அரசு இன்று தனி தீர்மானத்தை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
from India News https://ift.tt/A83YdVi
0 Comments