Tamil News Live Today: கர்நாடக தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக... இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்!

சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல்!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு, வருகின்ற மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 20-ம் தேதி கடைசி நாள் ஆகும். 21-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

பாஜக

இதனிடையே கர்நாடகாவில் ஆளும் பாஜக, சட்டசபை தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/6gzJb5A

Post a Comment

0 Comments