``ஹெச்.ராஜா சர்வதேச அரசியலுக்குச் செல்ல வாழ்த்துகள்!" - கார்த்தி சிதம்பரம் கிண்டல்

சிவகங்கையில், நேற்றைய தினம் நடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கருத்துகளை எழுப்பக்கூடாது என்பதற்காகத்தான் ராகுல் காந்தியை பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்திருக்கின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் 140 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கும். டெல்டாவில் நிலக்கரி‌ச் சுரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் அறிவித்தது தவறு, ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரின் எதிர்ப்புக் குரலுக்கு ஒன்றிய அரசு செவி சாய்த்து அதை கைவிட்டிருக்கிறது.

கார்த்தி சிதம்பரம்

ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததற்காக மறியல் செய்வது மட்டும் போராட்டம் கிடையாது. ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதும் போராட்டம்தான். மக்கள் மனதில் அதைக்கொண்டு செல்வதும் போராட்டம்தான். வளர்ச்சித் திட்டங்கள் வராததால் சிவகங்கை மக்களின் ஏமாற்றம் நியாயமானதுதான். அது எனக்குப் புரிகிறது. சிவகங்கை மக்களவைத் தொகுதியிலுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சமமாக திட்டங்கள் வரவேண்டும், தமிழக முதல்வரை வலியுறுத்துவேன்

பிரதமரின் தமிழக வருகையால் ஒரு மாற்றமும் நடக்காது. 2-ஜி வழக்கில் தணிக்கையாளர் மன்னிப்புக் கோரினாலும் நான் பாவமன்னிப்பு வழங்க மாட்டேன். அது கணக்குப் பிழை மட்டுமல்ல. அரசியல் சூழ்ச்சி. தொகுதி மக்கள் என்னை மறந்துவிட்டதாகக் கூறும் ஹெச்.ராஜாவுக்கு மக்களுக்காகப் பேசும் தகுதி இருக்கிறதா... அவர், தன்னை மறக்காமல் இருக்க வேண்டும்" என்றார்.

கார்த்தி சிதம்பரம்

'தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக ஹெச்.ராஜா கூறியிருக்கிறாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, பதிலளித்தவர், "சர்வதேச அரசியலுக்குச் செல்வதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.



from India News https://ift.tt/XDgAORM

Post a Comment

0 Comments