கடைசி பெஞ்ச் விஜயபாஸ்கர்; முதல் பெஞ்ச் மா.சு... வாத்தி துரைமுருகன் | கலகல சட்டசபை ஹைலைட்ஸ்

சட்டசபையில் நேற்று (18.4.2023) மக்கள் நல்வாழ்வுத்துறைக்கான மானியக் கோரிக்கை  விவாதம் நடந்தது. இதில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடைசி பெஞ்ச் சேர்ந்த விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு மா.சுப்பிரமணியன் முதல் மாணவன் போல்  ’ஆன் தி ஸ்பாட்டில்’ பதில் கூறி வந்தார். மேலும் மற்ற உறுப்பினர் பேசும்போது அமைச்சர்களின், சபாநாகரின் கவுன்டர்களும் இருந்தது.

சட்டப்பேரவை

`என்னது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனா?!’

கேள்வி கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினரான நத்தம் விஸ்வநாதனை பேச அழைத்த சபாநாயகர், “மாண்புமிகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்” என்று குறிப்பிட்டார்.  பிறகு தான்  மாற்றி கூறியிருப்பதை உணர்ந்து ’சாரி’ உறுப்பினரை அமைச்சர் எனக் கூறிவிட்டேன்’ என்றார்.

இளவரசி, சிற்றரசி இரண்டு பேரையும் பார்த்துக்கோங்க!

அதிமுக உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் சிறுமலையை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, சிறுமலையை, `மலைகளின் சிற்றரசி’ என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

உடனே எழுந்த  தொழில் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, “மலைகளின் அரசி ஊட்டி தெரியும், மலைகளின் இளவரசி கொடைக்கானல்... தெரியும்.  தற்போது நத்தம் அண்ணன் புதிதாக சிற்றரசி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார். இளவரசி , சிற்றரசி இரண்டுமே அவர் ஊரில்தான் வருகிறது. எனவே இளவரசி, சிற்றரசியைக் கவனித்துக் கொள்ள வேண்டும்” என கூறியது அவையில் சிரிப்பலையை உண்டாக்கியது.

அதன் பிறகு எழுந்த அமைச்சர் துரைமுருகன், ``சிற்றரசி சிறுமலை என்றால் ஏலகிரி என்ன?” என அவர் கேட்டது தொனி மீண்டும்  அவையில் உள்ளவர்களை சிரிக்க வைத்தது.

கடைசிப் பெஞ்ச் உறுப்பினர்கள்! 

மானியக் கோரிக்கை விவாதத்தில்  பேச தொடங்கிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ``எங்கள் கடைசி பெஞ்ச் எப்பொழுதும் கலகலப்பாக வைத்திருக்கும் செல்லூர் ராஜூ அவர்களுக்கும் முன்வரிசையில் அமர்ந்து  எங்களுக்குப் பாதுகாவலராக இருக்கும் நத்தம் விஸ்வநாதன் அவர்களுக்கு வணக்கம்” என தொடங்கினார் . உடனே அவை தலைவரோ, ``ஓ...பாதுகாவலராக நத்தம் விஸ்வநாதன் வைத்திருக்கிறீர்களா...?” என்று கூறியதைக் கண்டு விஜயபாஸ்கரே குலுங்கி சிரித்தார்.

சட்டப்பேரவையில் நத்தம் விஸ்வநாதன்

பருத்தி மூட்டை குடவுன்லையே இருந்திருக்கலாம்!

 மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலுரையின்போது, “மாண்புமிகு முதலமைச்சர் சொல்வதை யாரும் கேட்பதில்லை. அவர் தன்னை புழந்து பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அனால் நான் கேட்கிறேன். அவர் சொல்வதைக் கேட்டு, நான் முதல்வரை புகழ்ந்து பேசப்போவதில்லை.

மா.சுப்பிரமணியன்

ஆனால், அவர் பணி என் மனதை உலுக்கியிருக்கிறது. அந்த  சம்பவங்களை நினைவு கூறுகிறேன்” என மூன்று சம்பவங்களைக் (அரசு சார்பாக உடல் நலக்குறைவாக இருந்த குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது உள்ளிட்ட 3 சம்பவங்கள்) குறிப்பிட்டார். நீண்ட நேரம் அவர் பேசியது, `இதற்கு அவர் புகழ்ந்தே பேசி இருக்கலாம்’ என்றே பலருக்கும் தோன்றி இருக்கலாம்!

`மருந்து சரியான மருந்தா?’

 தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், “யாருக்கும் வலிக்காமல் ஊசி போட வேண்டும் என்பதே என் ஆசை. ஆனாலும் சில நேரம் அது வலிக்கும்போது ஆளுங்கட்சியை ரியாக்சன் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவை தலைவரின் கடமை” என்றார். அதற்கு அவைத் தலைவர் அப்பாவு, “சரியான மருந்து நீங்கள் செலுத்த வேண்டும்” என்று டைமிங்கில் அடித்தார்.

தொடர்ந்து விஜயபாஸ்கர் பேசுகையில், “சில நேரம் கடுமையான வார்த்தைகள் வரும்போது அதற்கு அவைத்தலைவர் ஆளுங்கட்சிக்கு ஒத்தடம் கொடுக்கும் பணியை செய்ய வேண்டும்” என கிண்டலடித்தார். இதற்கு அவைத்தலைவரோ, “நீங்க கடுமையான வார்த்தையோ கடுமையான ஊசியும் போட மாட்டீங்க. அப்படியே டாக்டர் போலே பேசி முடிச்சிடுங்க” என்றார்.

சபாநாயகர் அப்பாவு

மானியக் கோரிக்கை விவாதத்தில் விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் வழங்கி வந்தார். அப்போது எழுந்த  அவை முன்னவர் துரைமுருகன், "பொதுவாக, பதிலுரையில் தான் கேள்விகளுக்கான பதில் வழங்கப்படும். ஆனால் நீங்க இருக்கறதில்ல... அதனால இப்போவே சொல்றாரு” என்றார். அதற்கு அப்பாவு, `இல்ல இன்னைக்கு போக மாட்டாங்க. எதிர்க்கட்சித் தலைவர் உறுதி கொடுத்துட்டாரு” என்றது எதிர்க்கட்சியினரையும் சிரிக்க வைத்தது.

பச்ச கலர் இப்போது மஞ்ச கலர்!

குழந்தை பெற்ற பெண்களுக்கு  அம்மா பெட்டகம் வழங்கப்படுவது குறித்து பேசிய விஜயபாஸ்கர், “ பிறந்த குழந்தை முதலில் அம்மா என்றுதானே அழைக்கும். அதை மனதில் வைத்துதான் அம்மா பரிசு பெட்டகம்” என பெயர் சூட்டினோம். அப்போ பச்சை நிறத்தில் இருந்தது. இப்போது மஞ்சள் நிறத்துக்கு  மாறியிருக்கிறது” என்று கூறியதும் அவையில் சிரிப்பலை.

விஜயபாஸ்கர்

தொடர்ந்து விஜயபாஸ்கர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து வந்தார். அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன், ”இப்போது மணி 1.15 ஆகிறது. இன்னும் 7 பேர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பேச வேண்டும். மாலையில் மற்றுமொரு துறை இருக்கிறது. விஜயபாஸ்கருக்கும் இதுல அனுபவம் இருக்கு அமைச்சரும் அதற்கு பதிலளித்து வருகிறார். அவரு (விஜயபாஸ்கர்) வேற எல்லாத்தையும் ’நம்பற மாதிரியே பேசுவாரு’...இவங்க எப்போ முடிச்சி எப்போ சாப்பிடுவது” என்றார். இதற்கு விஜயபாஸ்கரோ, “உள்ளதை பேசினால் உண்மையாகவும் நம்பும் வகையில்தான் இருக்கும் என ரிப்ளை தந்தார்.



from India News https://ift.tt/KbnLBMy

Post a Comment

0 Comments