கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் பா.சிதம்பரம். அந்த காலகட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு உபகாரமாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குகளில் தொடர்புடையதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நான்கு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள மூன்று அசையும் சொத்துக்கள் மற்றும் ஒரு அசையா சொத்துக்கள் என ரூபாய் 11.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
from India News https://ift.tt/t6VCnpZ
0 Comments