தி.மு.க பவள விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதிதாக ஒருகோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் இலக்கை தி.மு.க அறிவித்திருக்கிறது. கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னையில் புதிய உறுப்பினர்களை இணைத்து இந்த இலக்கைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
மாவட்டச் செயலாளர் முபாரக் அனைவரையும் வரவேற்று மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பேச்சைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஜெனரேட்டர் இயக்கவும் சற்று தாமதமானது. இதனால் கடுப்பான அமைச்சர் துரைமுருகன், சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிக்கு போன் போட்டுக் கொடுக்கச் சொல்லி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
கட்சி நிர்வாகி ஒருவர் அந்த மின்வாரிய அதிகாருக்கு போன் செய்து அமைச்சர் கையில் கொடுத்தார். போனை வாங்கிய அமைச்சர் , 'ஏம்பா மூணு மினிஸ்டர்ங்க மீட்டிங்ல உக்கார்ந்து இருக்கோம். ரெண்டு முறை கரன்ட் கட்டாகுதுன்னா என்ன அர்த்தம். நாளைக்கு காலையில வெளியூருக்கு கிளம்ப தயாரா இரு" என எச்சரிக்கும் தொனியில் பேசாவிட்டு போனை துண்டித்து விட்டார்.
from India News https://ift.tt/FJOYDjW
0 Comments