இந்தியாவில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்... மூன்று மாதங்களில் 7.8% உயர்வு!

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பின்மை!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஏற்கனவே சீனாவை மிஞ்சியிருக்கும் இந்தியா, போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது குறித்து CMIE நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் கூறுகையில், ``உலகளாவிய மந்தநிலை ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மூன்று மாதங்களில் அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் 7.8% ஆக உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, நகர்ப்புற வேலையின்மை 8.4% ஆக உயர்ந்துள்ளது, கிராமப்புறங்களில் 7.5% ஆக உள்ளது. பிப்ரவரியில், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.5சதவீதமாக இருந்த நிலையில் அது மார்ச்சில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஐ.டி துறையில் வேலையிழப்பு

மாநில வாரியாக வேலைவாய்ப்பின்மை விபரங்களில் அதிகபட்சமாக,

ஹரியானாவில் - 26.8%,

ராஜஸ்தானில் - 26.4%,

ஜம்மு காஷ்மீரில் - 23.1%,

சிக்கிமில் - 20.7%,

பீஹாரில் - 17.6%,

ஜார்க்கண்டில் - 17.5% மும்,

குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் - 0.8% , புதுச்சேரியில் - 1.5 % மும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. மேலும் உத்தராகண்ட், குஜராத், கர்நாடகா, மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவாக உள்ளது" என்று தெரிவித்தார்.



from India News https://ift.tt/dXBvega

Post a Comment

0 Comments