கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களிடையே எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வில் சீட் கிடைக்காதவர்கள் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குத் தாவிக்கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தல் யுத்தத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் குதித்திருக்கிறது. சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய அந்தஸ்த்தை தேர்தல் கமிஷன் பறித்தது. இதனால் மீண்டும் தேசிய அந்தஸ்து பெற சரத் பவார் முடிவுசெய்திருக்கிறார். இதற்காக கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தங்களது கட்சியை களத்தில் இறக்க முடிவுசெய்திருக்கிறார்.
கர்நாடக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஆர்.ஹரி மும்பைக்கு வந்திருந்தார். அவர் கட்சியின் தலைவர் சரத் பவார், கட்சி நிர்வாகிகளுடன் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த சரத் பவார், ``எங்களது கட்சி கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 40 முதல் 45 தொகுதியில் தனித்துப் போட்டியிடும்" என்று தெரிவித்தார். இது குறித்து கர்நாடக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஆர்.ஹரி, ``40 முதல் 45 தொகுதியில் போட்டியிடுவதற்கு யூகம் வகுத்து செயல்பட முடிவுசெய்திருக்கிறோம். ஏற்கெனவே எங்களது கட்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் சேர்ந்திருக்கிறார். மேலும் ஒரு எம்.எல்.ஏ எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். இது தவிர முன்னாள் மேயர் ஒருவர் எங்களது கட்சியில் விரைவில் சேரவிருக்கிறார்" என்றார்.
கர்நாடகா, மகாராஷ்டிரா எல்லைப்பகுதியிலுள்ள தொகுதியில் அதிக அளவில் வேட்பாளர்களை நிறுத்த சரத் பவார் முடிவுசெய்திருக்கிறார். அதோடு ஆறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றவும் சரத் பவார் முடிவுசெய்திருக்கிறார்.
சரத் பவாரின் கட்சி இந்தத் தேர்தலில், கடிகாரம் சின்னத்தில் போட்டியிட தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்திருக்கிறது. சரத் பவாரின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. சமீபத்தில்தான் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை சரத் பவார் சந்தித்துப் பேசிவிட்டுவந்தார்,
from India News https://ift.tt/ntrspGD
0 Comments