`147-க்கும் 149-க்கும் ஒன்று தானே வித்தியாசம்; ரஃபேல் வாட்ச் பில் வந்ததா இல்லையா?’ - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட அனைத்து கோயில்களுக்கும் மாதம் 5 லிட்டர் தீப எண்ணெய் வழங்கும் ஆலயம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் கல்வி சாலையை போல் கோயில்களும் முக்கியம். பல இடங்களில் கோயில்களுக்கு வருமானம் இல்லாத நிலையில்  பூஜை முறைகளிலிருந்து விலகி செல்லும் சூழ்நிலை நிலவுகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் தான் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்

தெற்கு தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு கோயிலிலும் விளக்க எரிய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பித்துள்ளோம். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்பாக விவாத பொருளாக உள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லட்டும். இதற்காக எதையும் சந்திக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலை  திமுக தலைவர்கள், அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். ‘நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்’ என திமுகவினர் கூறியுள்ளனர்.

அண்ணாமலை

எது உண்மை என்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பது எங்களின் நிலைப்பாடு.” என்றவரிடம், “அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பில் முரண்பாடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு வானதி சீனிவாசன், ``டெல்லியில் இருந்து இப்போதுதான் வந்திருக்கிறேன். தொகுதி பணிகளில் இருக்கிறேன். அந்த வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை. 147க்கும் 149க்கும் ஒன்று தானே நடுவில் வித்தியாசம்.

அண்ணாமலை

பில் கேட்டீர்கள். பில் வந்ததா இல்லையா? நீங்கள் பில் தானே கேட்டீர்கள். சீரியல் நம்பர் கேட்டீர்களா.” என்று பதிலளித்தார்.



from India News https://ift.tt/pIBTx6z

Post a Comment

0 Comments