அதானி விவகாரம்: "உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, அரசுக்கு `நற்சான்றிதழ்' கொடுக்கும்" - ஜெய்ராம் ரமேஷ்

அதானியின் மோசடி குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதானி - பாஜக - மோடி

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிர்ஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்," நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்பது, அந்தக் குழுவில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இருக்கும். அந்தக் குழுவின் தலைவராக பா.ஜ.க எம்.பி-யே இருப்பார். ஆனாலும், மக்களின், எதிர்கட்சிகளின் கேள்விகளை முன்வைக்கவும், அது குறித்து விவாதிக்கவும், அரசிடமிருந்து பதில்களைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்பு கிடைக்கும்.

ஏனென்றால், அதன் விசாரணைகள் அனைத்தும் பதிவு செய்யப்படும் என்பதால் மிகுதமான குளறுபடிகளை தவிக்கலாம். ஆனால், உச்ச நீதிமன்றம் நியமித்திருக்கும் நிபுணர் குழு, அதானியை மையமாகக் கொண்டது. நாங்கள் எழுப்பும் கேள்விகள் பிரதமர் மோடி மற்றும் அவரின் அரசை இலக்காகக் கொண்டவை. அதனால் உச்ச நீதிமன்ற நிபுணர் குழு எங்களின் கேள்விகளை அரசை நோக்கி எழுப்பாது. அதானியின் ஊழல் பங்குச் சந்தையில் மட்டுமல்ல. அது பிரதமரின் எண்ணம் மற்றும் கொள்கைகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்

உச்ச நீதிமன்றத்தின் நிபுணர் குழுவுக்கும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு, அதானி குழு குறித்து எழுப்பப்படும், ஆராயப்படும் கேள்விகளின் தன்மையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றக் குழு அரசிடம் கேள்விகளைக் கேட்காது, மாறாக மத்திய அரசுக்கு `க்ளீன் சிட்' (குற்றமற்றவர் என சான்றிதழ்) கொடுக்கும். இந்தக் குழு, தற்போதைய அரசின் அதாவது பிரதமர் மீதான கறையை அகற்றும் முயற்சியே தவிர வேறில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/RakKH3W

Post a Comment

0 Comments