ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்தவர்களில் மிக முக்கியமான நபர் காந்தி. மகாத்மா காந்தி என்றழைக்கப்படும் இவரே சுதந்திர இந்தியாவின் தேசத் தந்தை என்றறியப்படுகிறார்.
இப்படியிருக்க, ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மகாத்மா காந்தி சட்டக்கல்வி பட்டம் பெற்றவர் இல்லையென்றும், உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே முடித்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
குவாலியரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மனோஜ் சின்ஹா, ``நான் சொல்வது ஒருவேளை சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இருப்பினும், மகாத்மா காந்தி ஒரு பல்கலைக்கழக பட்டம் கூட பெறவில்லை... நம்மில் பெரும்பாலோனோர், ஏன் படித்தவர்களே கூட, காந்தி சட்டக்கல்வி பட்டம் பெற்றவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர் சட்டக்கல்வி பட்டம் பெறவில்லை. உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ மட்டுமே முடித்திருக்கிறார். மேடையில் இருக்கும் சிலருக்கு இதில் எதிர்மறைப் பார்வையும் இருக்கலாம், ஆனால் நான் உண்மைகளின் அடிப்படையிலேயே பேசுகிறேன். இருந்தாலும், காந்தி படிக்கவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா... அப்படிச் சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
அதேசமயம், அவர் வழக்கறிஞருக்குத் தகுதியானவர். அப்படியென்றால் அவர் எவ்வளவு படித்தவர் என்று பாருங்கள். மேலும் இதைவிடவும் காந்தி, சத்தியத்தின் வலிமையால் சுதந்திரம் உட்பட அனைத்தையும் அடைந்து, தேசத் தந்தையானார்" என்று கூறினார். இவரின் பேச்சு தற்போது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
from India News https://ift.tt/3BZoMdv
0 Comments