டெல்லி: கெஜ்ரிவாலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்? - சட்டப்பேரவையில் பாஜக ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் இன்று சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது. இதில் டெல்லியிலுள்ள ஊழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்க பட்ஜெட் கூட்டத்தொடரை 10 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பா.ஜ.க நோட்டீஸ் கொடுத்தது. இதற்கிடையே ஊழல் வழக்குகளில் சிக்கியிருக்கும் கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக, வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர டெல்லி பா.ஜ.க முடிவு செய்திருக்கிறது. கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து நேற்று நடைபெற்ற பா.ஜ.க சட்டப்பேரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், "கெஜ்ரிவால் அரசின் இரண்டு அமைச்சர்கள் சிறையில் இருக்கின்றனர். மதுபானம், ஹவாலா, வகுப்பறை ஊழல், டெல்லி ஜல் போர்டு, மின்சார மானியம், டிடிசி உள்ளிட்ட பல ஊழல்களில் அரசு ஈடுபட்டிருக்கிறது. மேலும், காற்று மாசுபாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, ரேஷன் வழங்காமை, மொஹல்லா கிளினிக்குகளில் முறைகேடுகள், யமுனையைச் சுத்தம் செய்யாதது போன்ற குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன.

மணீஷ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயின்

இவை குறித்து விவாதிக்கவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனியும் கெஜ்ரிவால் அரசு பதவியில் இருக்க தார்மிகமாகவும், அரசியலமைப்பிலும் உரிமை இல்லை. அதனால், பட்ஜெட் கூட்டத்தொடரை குறைந்தது 15 நாள்கள் நீட்டிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் கேள்வி நேரம் ஒதுக்கப்பட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, இன்று டெல்லி சட்டப்பேரவையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி டெல்லி பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



from India News https://ift.tt/ZY7bIrz

Post a Comment

0 Comments