``பத்திரப் பதிவுக் கட்டணம் 2% குறைப்பு!" - தமிழக பட்ஜெட் அறிவிப்பு!

தமிழகத்தில் பத்திரப் பதிவுக் கட்டணம் 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட் 2023

2023-24-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில் பத்திரப் பதிவுக் கட்டணம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது...

  • இப்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப, நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

  • நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவுக் கட்டணத்தை 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

நிலத்தின் வழிக்காட்டு மதிப்பை திருத்த குழு அமைப்பு!
  • இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8.6.2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவிகிதம் முத்திரைத் தீர்வை, 2 சதவிகிதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்துக்கு (non-family member settlement) 7 சதவிகிதம் முத்திரைத் தீர்வை, 2 சதவிகிதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

  • இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்" என்று கூறினார்.



from India News https://ift.tt/evaRKEI

Post a Comment

0 Comments