தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என, மாநில திட்ட கமிஷன் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் 1,543 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. காலை உணவுத்திட்டத்துக்குப் பிறகு, 1319 அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 217 பள்ளிகளில் மாணவர்கள் வருகைப் பதிவில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு 100% ஆக உள்ளது.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 98.5%, கரூர் மாவட்டத்தில் 97.4%, நீலகிரி மாவட்டத்தில் 96.8% வருகைப் பதிவு உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் 1,086 பள்ளிகளில் 20% வருகைப் பதிவு அதிகரித்துள்ளது. 22 பள்ளிகளில் வருகைப் பதிவு 40% அதிகரித்துள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இரண்டாம் கட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாநில திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, முதல்வர் மு.க ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆழமான ஆய்வை நடத்தவும் திட்ட கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி ஒரு வேளைக்கு ஒரு மாணவருக்கு ஆகும் செலவு ரூ.12.71 ஆகும். இந்தத் திட்டத்துக்கான உணவு நகர்ப்புறங்களில் மையமாக இருக்கும் சமையல் கூடங்களில் சமைக்கப்பட்டு அந்தந்தப் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிமாறப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் அந்த வளாகத்திலேயே உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட சமையல்கூடங்களை அதிகரிப்பது பற்றியும் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
from India News https://ift.tt/e9Gmbg7
0 Comments