பிபிசி: ``ஒட்டுமொத்த நாட்டையும் அடிமையாக்க விரும்புகிறதா பாஜக!?" - அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு!

பி.பி.சி ஊடக நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தியது, மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை கடும் கண்டனத்துக்குள்ளாக்கியது. வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கையால், பல்வேறு ஊடக அமைப்புகளும், அரசியல் தலைவர்களும் மத்திய அரசைக் கடுமையாக சாடின.

பிபிசி நிறுவனத்தின் வருமானவரித்துறை சோதனை

அதேசமயம், `இது சோதனை அல்ல, வெறும் ஆய்வு மட்டுமே. நிதிநிலை அறிக்கை மற்றும் கணக்குகள் பற்றி ஆய்வுசெய்யப்பட்டது" என வருமானவரித்துறை அதிகாரிகள் காரணம் கூறினர். இருப்பினும் இன்று மீண்டும் இரண்டாவது நாளாக, பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனையைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். எனவே, ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்பது பொதுமக்களின் குரலை நசுக்குவதற்குச் சமம்.

அரவிந்த் கெஜ்ரிவால்

பா.ஜ.க-வுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் மீது வருமானவரித்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். நாட்டின் ஜனநாயக அமைப்பையும், நிறுவனங்களையும் நசுக்கி ஒட்டுமொத்த நாட்டையும் அடிமையாக்க விரும்புகிறதா பா.ஜ.க..." என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.



from India News https://ift.tt/ZQ8cJT9

Post a Comment

0 Comments