``ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும்!" - பாஜக தலைவர் காட்டம்

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வரும் 30-ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவுறவிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு நாள்களில் ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை நுழையவிருக்கிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா, `இங்கு நுழைவதற்கு முன்பு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க தலைவர் ரவீந்தர் ரெய்னா

இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரவீந்தர் ரெய்னா, ``காந்தி குடும்பமும், காங்கிரஸும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான வரலாற்றுத் தவறுகளைச் செய்திருக்கின்றனர்.

ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைவதற்கு முன்பு, 70 ஆண்டுகளாகக் கட்சி செய்த தவறுகளுக்காகவும், பாவங்களுக்காகவும் நாட்டிடம், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். காங்கிரஸ் குடும்பம் செய்த அட்டூழியங்களை மறக்க முடியாது.

ராகுல் காந்தி

அந்தக் கட்சியின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த தேசியவாதிகளை அவர்கள் எப்படி அவமானப்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது பற்றிய நீண்ட பட்டியல் இருக்கிறது. மேலும், 1947-ல் நாடு ஏன் பிரிக்கப்பட்டது என்பதற்கும் ராகுல் காந்தி பதிலளிக்கவேண்டும். மோடி உண்மையிலேயே நாட்டை ஒருங்கிணைத்திருக்கிறார். அதேநேரத்தில் காங்கிரஸ் வேறுவிதமாகச் செய்திருக்கிறது" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/i2Hj5kO

Post a Comment

0 Comments