திருடிய போன் நண்பனுக்குப் பரிசளிப்பு; போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த பலே இளைஞர்கள்... சிக்கியது எப்படி?

மும்பை, கிர்காவ் பகுதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் வீடுகளில் திருட்டுகள் நடந்து வந்தன. மக்களின் தொடர் புகார்களைத் தொடர்ந்து, போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போதும் அவர்களுக்கு எந்தவித துப்பும் துலங்கவில்லை. மேலும், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கறுப்பு நிற உடையில் கைவரிசையைக் காட்டுவதால், அவர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் சரியாகப் பதிவாகவில்லை. அதேபோல, செல்போன்கள் அதிக அளவில் திருடப்பட்டு வந்தன. அதனால், போலீஸார் திருடுபோன செல்போன்களை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர். அப்போது, திருடுபோன ஒரு செல்போன் திடீரென ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டது. அந்த போனை பயன்படுத்தியவர், அதில் வேறு சிம்கார்டை போட்டதும் தெரியவந்தது.

செல்போன்

உடனே அந்த போனை வைத்திருந்த நபரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அந்த நபர், தன்னுடைய பிறந்தநாளுக்கு நண்பர்கள் பரிசாக அந்த போனை கொடுத்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கோரேகாவ் பகுதியில் விஷ்ணு பிரபாத் தேவ் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த லட்சுமண் என்பவரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இருவரும் சேர்ந்து மும்பை மட்டுமல்லாது ராஜஸ்தான் உட்பட நாடு முழுவதும் பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது

இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பேசுகையில், ``கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரும் பழுது பார்க்கப்படும் கட்டடங்களை குறிவைத்து இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இரவில் அனைவரும் உறங்கிய பிறகு கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு பழுதுபார்ப்பு பணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் கம்புகள் மூலம் கட்டடத்தின் பின்புறத்திலிருந்து மேலே ஏறிச்சென்று திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருவரும் திருடிய போன்களில் ஒன்றை தங்களின் நண்பனுக்குப் பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கின்றனர். அந்த போனில் புதிய சிம்கார்டு போட்டபோது அதன் மூலம் இந்த வழக்கில் எங்களுக்கு முதல் துப்பு கிடைத்தது. அதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி, இருவரையும் கைதுசெய்தோம்" என்று தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/pLncdFv

Post a Comment

0 Comments