மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜா படேரியா நேற்று பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அதில், "சமூகத்திலிருந்து தீமையை அகற்ற வேண்டுமானால் மோடியைக் கொல்லுங்கள். தேர்தலை அவரே முடித்து வைப்பார், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவார். அவருடைய ஆட்சியில் பட்டியலின மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள். எனவே, தீமையை வெல்ல நீங்கள் மோடியைக் கொல்லத் தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Congress desperation knows no bounds. Its leader, Raja Pateria, is instigating people to assassinate PM Modi.
— Vijender Gupta (@Gupta_vijender) December 12, 2022
No wonder Congress does not hesitate in aligning itself with anti-nationals. pic.twitter.com/UkU1wdY5vN
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜா படேரியா, "பிரதமரை தோற்கடிக்கச் செய்யுங்கள் என்ற அர்த்தத்தில் தான் பிரதமரைக் கொல்லுங்கள் என்று கூறினேன். ஆனால் என் கருத்துகள் தவறாக விளக்கப்பட்டிருக்கிறது" எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம், "இது மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அல்ல என்பதை தெளிவாக உணர்த்தும் படேரியாவின் கருத்தை நான் கேள்விப்பட்டேன். இந்த காங்கிரஸ் இத்தாலிக்கு சொந்தமானது. இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர்.யை உடனடியாக செய்யுமாறு எஸ்.பி.க்கு கோரிக்கை வைக்கிறேன்" என்றார் .
from தேசிய செய்திகள் https://ift.tt/NGfYCku
0 Comments