``இஸ்லாமிய வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால்..." - பாஜக எம்.எல்.ஏ-வின் வைரல் வீடியோ

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக ஏற்கெனவே பா.ஜ.க மற்றும் ஜே.டி.எஸ் தலைவர்கள் பிரசாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ப்ரீதம் கவுடா, கர்நாடகாவின் ஸ்ரீநகரில் உள்ள இஸ்லாமிய வாக்காளர்களை மிரட்டுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், "நான் இதுவரை இஸ்லாமியர்களை என் சகோதரர்களாகவே பார்த்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அவ்வாறே பார்ப்பேன். நான் உங்களுக்கு ஒரு உதவி செய்தால், நீங்களும் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நீங்கள் எனக்கு உதவி செய்யவில்லை என்றால், அதில் எந்தப் பயனுமில்லை என்று நினைக்கிறேன்.

நடந்து முடிந்த மூன்று தேர்தல்களிலும் நீங்கள் எனக்கு வாக்களிக்காமல் ஏமாற்றிவிட்டீர்கள். ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தல் வரவிருக்குறது, மீண்டும் நீங்கள் என்னை ஏமாற்றினால், நானும் அப்படியே இருப்பேன். நீங்கள் என்னுடைய பக்கம் வீட்டுப்பக்கம் வந்தால் காபி கொடுத்து திருப்பி அனுப்பிவிடுவேன். நான் உங்களுக்கு எந்த வேலையும் செய்துதரமாட்டேன். தண்ணீர், சாலை, வடிகால் பணிகளை மேற்கொள்வது என்னுடைய கடமை. ஆனால் தனிப்பட்ட வேலைகள் (personal work) எதுவும் செய்து தரமாட்டேன்" என்றார். இது குறித்து சமூகவலைதளத்தில் பலரும் விமர்சித்துவருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/J38Mpqw

Post a Comment

0 Comments