மும்பை அருகில் இருக்கும் மும்ப்ரா அம்ருத் நகர் பாத்திமா ஹைட்ஸ் என்ற கட்டடத்தில் வசித்தவர் ஷபா ஹஸ்மி. ஷபாவுக்கு மூன்று மகள்கள். அவரின் கணவர் போதைப்பொருள் வழக்கில் இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். டியூசன் நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தில் ஷபா தனது குடும்பத்தை நடத்தி வந்தார். மூத்த மகளான 17 வயது சிறுமி, புர்ஹான் ஷேக் (22) என்ற வாலிபரை காதலித்து வந்தார். மைனர் பெண்ணின் காதலுக்கு அவர் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் தாய், மகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. சிறுமியின் காதலை ஏற்கவே முடியாது என்பதில் அவரின் தாயார் உறுதியாக இருந்தார். புர்ஹான் ஷேக் அடிக்கடி சிறுமியின் வீட்டில் தங்குவது வழக்கம். இதற்கும் ஷபா எதிர்ப்பு தெரிவித்தார். நேற்று இரவும் சிறுமி வீட்டில் புர்ஹான் ஷேக் தங்கினார். இதனால் காலையில் தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் சிறுமி, தன்னுடைய காதலனோடு சேர்ந்து கத்தி மற்றும் கத்திரிக்கோல் உதவியோடு ஷபாவின் நெஞ்சு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு வீட்டின் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
கொலைசெய்யப்பட்ட ஷபாவிற்கு உறவினர் ஒருவர் போன் செய்தார். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கொலைசெய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்த்தார். கதவு பூட்டியிருந்தது. கதவுக்கு அருகில் நின்று போன் செய்தபோது, வீட்டிற்குள்ளிருந்து போன் சத்தம் வந்தது. உடனே ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்த உறவினர், இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே அந்தப் பெண் ரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
சிறுமியும், அவரின் காதலனும் வீட்டிலிருந்து அவசரமாக புறப்பட்டுச் சென்றதை பக்கத்துவீட்டுக்காரர் பார்த்திருந்தார். அதையடுத்து, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இது குறித்து மும்ப்ரா இன்ஸ்பெக்டர் அசோக், ``ஷபாவைக் கொலைசெய்த சிறுமியும், அவரின் காதலனும் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மைனர் பெண்ணின் காதலுக்கு ஷபா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் சேர்ந்து கொலைசெய்திருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/pX3m0W9
0 Comments