மோடியின் முகச்சாயலில் பாப்பாஞ்சி உருவ பொம்மை-பாஜக எதிர்ப்பால் கார்னிவல் கமிட்டி எடுத்த புதிய முடிவு!

கேரள மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போர்ட் கொச்சியில் 60 அடி உயரத்தில் சான்டாகிளாஸ் உருவ பொம்மை வைக்கப்படுவது வழக்கம். பின்னர் டிசம்பர் 31-ம் தேதி இரவு அந்த பொம்மையை எரித்து புத்தாண்டை வரவேற்பதும் நடந்து வருகிறது. சான்டாகிளாஸ் பொம்மையை பாப்பாஞ்சி என்றும், அதை எரிக்கும் நிகழ்ச்சியை 'பாப்பாஞ்சி கத்திக்கல்' எனவும் அந்தப் பகுதியினர் கூறுகின்றனர். இந்த நிலையில், கார்னிவல் கமிட்டி சார்பில் கொச்சியில் அமைக்கப்பட்டு வரும் பாப்பாஞ்சி உருவம் பிரதமர் நரேந்திர மோடியின் முகச்சாயலில் அமைந்திருப்பதாகக் கூறி பா.ஜ.க அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பாப்பாஞ்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதிக்குச் சென்று பா.ஜ.க-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பாப்பாஞ்சி அம்மைக்கும் பணி

`நாட்டின் பிரதமரை அவமானப்படுத்தும் விதமாக பாப்பாஞ்சி அமைக்க அனுமதிக்கமாட்டோம்' என பா.ஜ.க-வினர் உறுதியாக தெரிவித்தனர். கார்னிவல் கமிட்டியிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பாப்பாஞ்சியின் முகத்தோற்றத்தில் மாறுதல் ஏற்படுத்தப்படுவதாகவும், யாருக்கும் ஆட்சேபனை இல்லாத வகையில் புதிய ரூபத்தில் பாப்பாஞ்சி உருவம் அமைக்கப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்படும் எனவும் கார்னிவல் கமிட்டி அறிவித்தது.

பிரதமர் நரேந்தொர மோடி முகச்சாயலில் அமைக்கப்பட்ட பாப்பாஞ்சி உருவம்

கொச்சி கார்னிவல் கமிட்டி விழாவுக்காக தனியார் ஏஜென்சி சார்பில் பாப்பாஞ்சி தயார் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் பாப்பாஞ்சியின் உருவபொம்மை சர்ச்சையை கிளப்பியது. கொரோனா தொற்றை தோற்கடித்ததை விளக்கும்விதமாக இந்த ஆண்டு பாப்பாஞ்சியை வடிவமைப்பதாக கார்னிவல் கமிட்டி அறிவித்திருக்கிறது. கார்னிவல் கமிட்டியினர் பாப்பாஞ்சி உருவத்தை மாற்றுவதாக அறிவித்ததை தொடர்ந்து பா.ஜ.க-வினர் போராட்டத்தை கைவிட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/1WvlLHZ

Post a Comment

0 Comments