பாலிவுட் படங்கள் மற்றும் இந்தி டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வந்த நடிகை துனிஷா சர்மா நேற்று முன்தினம் மும்பை புறநகர் பகுதியில் நடந்த படப்பிடிப்பின் இடைவெளியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இத்தற்கொலை தொடர்பாக துனிஷாவின் காதலன் சசீன் மொகமத் கான் அன்றே போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். துனிஷாவின் தற்கொலைக்கு மொகமத் கான்தான் காரணம் என்று நடிகையின் தாயார் குற்றம்சாட்டி இருக்கிறார். விசாரணைக்குப் பிறகு மொகமத் கான் நேற்று கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆரம்பத்தில் மொகமத் கான் கைவிட்டதாலும், கர்ப்பமாக இருந்ததாலும் மன அழுத்தம் காரணமாக துனிஷா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை போலீஸார் மறுத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் மொகமத் கான் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், டெல்லியில் ஸ்ரத்தா படுகொலை சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள அசாத்தியமான சூழ்நிலை காரணமாகவே துனிஷாவை பிரிந்ததாக தெரிவித்துள்ளார். அதோடு `வேறு மதம், அதிகப்படியான வயது வித்தியாசம் போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு இந்த உறவு திருமணம் வரை செல்லாது என்று எடுத்துக்கூறித்தான் உறவை முறித்துக்கொண்டேன்' என்றும் தெரிவித்துள்ளார். `காதல் உறவு முறிந்த பிறகும் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்' என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, `இதற்கு முன்பும் ஒரு முறை துனிஷா தற்கொலைக்கு முயன்றார். நான் அவரது தாயாரிடம் துனிஷாவை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்' என்றும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
போலீஸார் இருவரது மொபைல் போன்களையும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி இருக்கின்றனர். அதில் இருவரது உரையாடலை மீட்டெடுக்கும்போது அவர்களுக்குள் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
போலீஸார், ``தற்கொலை செய்த தினத்தன்று துனிஷா வீட்டிலிருந்து மகிழ்ச்சியாகவே படப்பிடிப்புக்கு புறப்பட்டுள்ளார். காலையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு மொகமத் கானும், துனிஷாவும் மதிய உணவுக்காக மேக்கப் அறைக்குச் சென்றனர். அன்றைக்கு துனிஷா மதிய உணவு சாப்பிடவில்லை. மொகமத் கான் சாப்பிட்ட பிறகு இருவரும் வேலையை தொடங்கினர். மொகமத் கான் படப்பிடிப்புக்கு சென்றுவிட்ட நிலையில் துனிஷா மேக்கப்பிற்காக சென்றார். தேநீர் இடைவேளை வரை துனியா படப்பிடிப்புக்கு வரவில்லை. அதனால் அனைவரும் துனிஷாவை தேட ஆரம்பித்தனர். மேக்கப் அறையின் வாஷ் ரூம் கதவு திறக்கப்படாததால் அதனை உடைத்து திறந்து பார்த்தபோது துனிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளனர்.
துனிஷாவின் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் என திரைப்படத் தொழிலாளர் சங்கம் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் சுரேஷ் குப்தா கூறுகையில், ``துனிஷா தற்கொலை செய்த படப்பிடிப்பு சென்று இருந்தேன். அனைவரும் பேசவே பயப்படுகின்றனர். நடிகைகள் பலர் எனக்கு போன் செய்து துனிஷா கொலைசெய்யப்பட்டதாக கூறுகின்றனர். அவர்கள் பேசவே பயப்படுகின்றனர். எனவே இது குறித்து மாநில அரசு சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை நடத்தவேண்டும். துனிஷா கலந்துகொண்ட படப்பிடிப்பு மிகவும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்தது. அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/vqCSx3r
0 Comments