கேரள முதலமைச்சரின் அலுவலக இல்லமான கிளிப் ஹவுஸ் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கிறது. இந்த வீட்டின் பாதுகாப்புக்காக காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். போலீஸார் ஷிப்ட் மாறும்போது துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்வது வழக்கம். அந்த வகையில், காலை 9:30 மணியளவில் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்திருக்கிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால் முதல்வர் பினராயி விஜயன் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்தார். அதன்பின்னர் சற்று நேரத்தில் துப்பாக்கி வெடித்தது. பாதுகாப்பு மிகுந்த முதல்வரின் வீட்டில் துப்பாக்கி வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முதல்வரின் குடியிருப்பான கிளிப் ஹவுஸில் பாதுகாப்புக்காக 'ரேபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ்' பிரிவு போலீஸார் பணியில் இருக்கின்றனர். துப்பாக்கி வெடித்த சம்பவம் குறித்து திருவனந்தபுரம் சிட்டி போலீஸ் கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, துப்பாக்கி வெடிக்க காரணமான எஸ்.ஐ ஹாசிம் ரஹ்மான் என்பவரை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரி, "முதல்வரின் வீடான கிளிப் ஹவுசில் கார்டு ரூமில் எஸ்.ஐ ஹாசிம் ரஹ்மான் என்பவர் துப்பாக்கியை சுத்தம் செய்த சமயத்தில் தவறுதலாக துப்பாக்கி வெடித்தது. அது குறித்து விசாரணை நடத்தியதில் அவர் அலட்சியமாக துப்பாக்கியை சுத்தம் செய்ததால் அது வெடித்தது கண்டறியப்பட்டது. பிஸ்டலின் சேம்பரில் தோட்டா இருந்ததை கவனிக்காமல் எஸ்.ஐ துப்பாக்கியை சுத்தம் செய்திருக்கிறார்.
அந்த சமயத்தில் துப்பாக்கி தரையை நோக்கி இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்ல. பாதுகாப்பு மிகுந்த பகுதியில் கவனக்குறைவாக செயல்பட்ட எஸ்.ஐ ஹாசிம் ரஹ்மான் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதுசாதாரண நடவடிக்கைதான்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/M3Li2pe
0 Comments