பெங்களூரு நகரில் சிறுத்தைகள் உலா... அச்சத்தில் மக்கள்! - வனத்துறை கண்காணிப்பு தீவிரம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரம், அதிக அளவு ஐ.டி., கம்பெனிகளுடன் இந்தியாவின் பெரும் ‘ஐ.டி., ஹப்’ ஆக உள்ளது. இந்த நிலையில், நகரப்பகுதிக்குள் கடந்த, இரண்டு நாள்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், தெற்கு பெங்களூரு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பேஸ் 1 மற்றும் பேஸ் 2 பகுதியிலிருந்து வெறும், 25 கி.மீ தொலைவுக்குள், துரஹல்லி மற்றும் கெங்கேரி காப்புக்காடு உள்ளது.

கெங்கேரி காப்புக்காட்டுக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவக்கல்லுாரி அருகே நேற்று இரவு, சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. இதேபோல், கெங்கேரி சுற்றுப்பகுதியில், பெங்களூர் மாநகர பகுதிக்குள் குடியிருப்புகள் அருகே, நான்கு இடங்களில் சிறுத்தை நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.சி.டி.வியில் பதிவான சிறுத்தை.

நாய்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை சிறுத்தைகள் கொன்றுள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு, மைசூர் பகுதியில் 20 வயது மாணவியை சிறுத்தை கொன்ற நிலையில், பெங்களூரு நகருக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால், மக்கள் அச்சத்தின் உள்ளனர், சிறுத்தைகளை பிடிக்க கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இது குறித்து பெங்களூர் துணை வனப்பாதுகாவலர் ரவிஷங்கர் இன்று நிருபர்களிடம், ‘‘இரண்டுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஒரு சிறுத்தை தான் கெங்கேரி வனத்தையொட்டிய பகுதிகளுக்கு வந்து செல்கிறது. தேவையான இடங்களில், கூண்டுகள் வைத்துள்ளோம். டிரோன் பயன்படுத்தியும் கண்காணிக்கிறோம், விரைவில் சிறுத்தையை பிடிப்போம்,’’ என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/HF78BmN

Post a Comment

0 Comments