விளையாட்டை ரசித்து கொண்டிருந்த பெற்றோர் - 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழப்பு

மும்பையின் தென்பகுதியில் உள்ள வான்கடே ஸ்டேடியம் அருகில் கார்வாரே கிளப் இருக்கிறது. இந்தக் கிளப்பில் துணைத்தலைவராக இருக்கும் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ராஜ்புரோஹித் கிளப் உறுப்பினர்களுக்காக கிளப்பின் மாடியில் அகண்ட திரையில் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண ஏற்பாடு செய்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

இரவில் அனைவரும் விளையாட்டுப்போட்டியை ரசித்துக்கொண்டிருந்தனர். அவினாஷ் ரத்தோட் என்பவர் தன்னுடைய மகனுடன் விளையாட்டு போட்டியை பார்க்க வந்திருந்தார். போட்டி நடந்து கொண்டிருந்தபோது அவினாஷின் 3 வயது மகன் ரித்யாஷ் மற்றொரு 10 வயது சிறுவனுடன் 5வது மாடியில் இருக்கும் வாஷ் ரூமுக்கு சென்றார். வாஷ் ரூம் சென்றுவிட்டு திரும்ப வரும் போது படிக்கட்டின் ஓரத்தில் தடுப்பு இல்லாமல் இருந்தது. 3 வயது சிறுவன் ரித்யாஷ் படிக்கட்டில் தவறி இடைவெளி வழியாக தவறி கவிழுந்துவிட்டான். உடனே அவனுடன் இருந்த 10 வயது சிறுவன் ஓடி வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்தார். 3 வயது சிறுவன் படிக்கட்டில்தான் தவறிவிழுந்தான் என்று நினைத்து அவினாஷ் வந்தார்.

தவறிவிழுந்த இடம்

ஆனால் அவன் அங்கு இல்லை. இதையடுத்து கீழே சென்று பார்த்த போது ரித்யாஷ் கீழே தவறிவிழுந்து விட்டதாக வாட்ச்மேன் தெரிவித்தார். உடனே ரித்யாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் பல மணி நேர சிகிச்சைக்கு பிறகு ரித்யாஷ் உயிரிழந்துவிட்டான்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். படிக்கட்டுக்கு இடைப்பட்ட இடைவெளியில் பாதுகாப்பு கண்ணாடி அல்லது வலை அமைக்காமல் இருந்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாக அவினாஷ் குற்றம் சாட்டியிருக்கிறார். அதோடு கிளப் நிர்வாகம் கவனக்குறைவாக செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பா.ஜ.க தலைவர் ராஜ்புரோஹித் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/WRDyVSO

Post a Comment

0 Comments