இறந்த பெண்களின் உடல்களை நிர்வாணமாக வீடியோ எடுத்த ஊழியர்... பிணவறையில் நடந்த கொடூர சம்பவம்!

கர்நாடகாவில், மருத்துவமனை ஒன்றின் பிணவறையில் பணியாற்றிய ஒருவரின் செல்போனில், பெண் சடலங்களின் நிர்வாண படங்கள், வீடியோக்கள் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சையது உசேன் என்று அறியப்படும் அந்த நபர் கொரோனா காலத்தில், மடிக்கேரி மாவட்ட மருத்துவமனையில் பிணவறை ஊழியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

சடலம்

இந்நிலையில், சையது பல நேரங்களில் மருத்துவமனையின் பெண் ஊழியர்களைப் பிணவறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, இந்து ஜாக்ரன் மன்றம் (Hindu Jagran Forum) மருத்துவமனை டீனிடம் (dean of the hospital) கூறியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், பிணவறைக்கு வரும் பெண் சடலங்களை நிர்வாணமாகப் படம் , வீடியோ எடுப்பதாகவும் சையது மீது புகார்கள் எழுந்திருக்கிறது. இதுகுறித்து போலீஸிலும் சையது மீது புகாரளிக்கப்பட்டிருக்கிறது.

ஆபாச வீடியோ - செல்போன்

இதற்கிடையில் சையது சமீபத்தில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, பொதுமக்கள் மடக்கிப்பிடித்து அவரிடமிருந்து செல்போனைப் பறித்தனர். இருப்பினும் சையது அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் போலீஸார் சையதுவின் போனை ஆராய்ந்ததில், அதில் பெண் சடலங்களின் படங்களும், வீடியோக்களும் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆனால், தன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்த சையது, முன்னதாகவே தன் ராஜினாமா கடிதத்தை மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு தலைமறைமாகிவிட்டார். போலீஸ் தற்போது தலைமறைவான குற்றவாளி சையதை மும்முரமாகத் தேடிவருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/F02uTfJ

Post a Comment

0 Comments