கேரளா: நாய்க்கு உணவளிக்காததால் ஆத்திரம்; உறவினரைக் கொன்றுவிட்டு நாடகமாடிய இளைஞர்!

கேரளாவில், நாய்க்கு உணவளிக்காத காரணத்துக்காக இளைஞர் ஒருவர் தன்னுடைய உறவினரை அடித்துக் கொன்றுவிட்டு, மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாய்

பாலக்காட்டில் ஹக்கீம்(27) என்பவர், கடந்த வெள்ளிக்கிழமையன்று தன்னுடைய நாய்க்கு உணவளிக்கவில்லை என்பதற்காக ஹர்ஷத் (21) எனும் தன் உறவினரை அடித்துக் கொன்றுவிட்டார். ஆனால் ஹக்கீம், இதனை மூடிமறைக்கும்விதமாக, மாடியிலிருந்து விழுந்துவிட்டதாகக் கூறி நாடகமாடி, ஹர்ஷத்தை தன் நண்பர்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர், மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில் இறந்தவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, விலா எலும்புகள் உடைந்து ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார் எனத் தெரியவர, இந்த விவகாரம் போலீஸிடம் சென்றது.

கைது

அதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தியதில், ஹக்கீமும், ஹர்ஷத்தும் ஒன்றாகத் தங்கி பெரும்தொடி என்ற கிராமத்தில் கேபிள் வேலை செய்துவந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ஹக்கீம்தான், தன்னுடைய நாய்க்கு உணவளிக்காத காரணத்துக்காக ஹர்ஷத்தை அடித்துக் கொன்றுவிட்டு, மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார் என்று நாடகமாடியிருக்கிறார் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கொப்பம் போலீஸார், கொலையாளியான ஹக்கீமை கைதுசெய்தனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/lZCQkUT

Post a Comment

0 Comments