கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு அருகிலுள்ள பசவனகுடி அருகே, `ஸ்ரீ பிக் புல்’ கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் ஆண்டுதோறும், நவம்பர் மாதம், `பசவனகுடி கடலெக்காய் பரிஷே’ என்ற தலைப்பில், நிலக்கடலை விவசாயிகள் திருவிழா நடத்தி வருகின்றனர்.
திருவிழாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா பகுதி நிலக்கடலை விவசாயிகள், தாங்கள் விளைவித்த நிலக்கடலையை விற்பனை செய்வது வழக்கம்.
கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த இந்தத் திருவிழாவுக்கு இம்முறை அனுமதி கிடைத்தது. இதையடுட்து திருவிழா நேற்று (21–ம் தேதி) தொடங்கியது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கடந்த 20–ம் தேதி இரவு திருவிழாவை துவக்கி வைத்து, நிலக்கடலையை வாங்கிச் சென்றார். வரும் 23–ம் தேதி இரவு வரையில் திருவிழா நடக்கிறது. இரு நாட்களும், `ஸ்ரீ பிக் புல்’ கோவிலில், நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
திருவிழாவில், சுடச்சுட ஆவி பறக்கும் வேகவைத்த நிலக்கடலை, மணலில் வேகவைத்த நிலக்கடலை மற்றும் வேக வைக்காத நிலக்கடலை என பல `வெரைட்டியாக’ விற்பனை செய்யப்படுகிறது. கைவினை பொருட்கள் முதல், உணவு வரையில், மக்களை கவரும் பலதும் விற்பனை செய்யப்படுகிறது. நந்தி வழிபாடு, பல வகை மக்கள், புதுமையான கலாச்சாரம், கொண்டாட்டம், டேஸ்ட்டான `புட் அண்டு ஸ்நாக்ஸ்’ என அனைத்தையும் அனுபவிக்கணுமா? மக்களே வண்டிய கிளப்புங்க `பிக் புல்’ கோவிலுக்கு!
from தேசிய செய்திகள் https://ift.tt/bE7RBtG
0 Comments