காதலியின் மகளை கொலை செய்து பிணத்துடன் உறவு... நகை , பணத்துடன் தப்பிச்சென்ற நபர் மும்பையில் கைது!

சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் ராஜூ மணி. இவர் சென்னையில் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அந்தப் பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. ஆரம்பத்தில் குழந்தைகளை தன்னுடைய பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ராஜூவுடன் தனியாக வசித்து வந்த அந்தப் பெண் பின்னர் தன்னுடைய குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டார்.

ராஜூ அந்தப் பெண்ணின் இரண்டு குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். இதனால் அந்தப் பெண்ணும் அவரின் வார்த்தைகளை நம்பி தன்னுடைய 18 வயது மகள் உட்பட இரண்டு பேரையும் தன்னுடன் அழைத்து வைத்துக்கொண்டார். ஆனால் ராஜூவிற்கு 18 வயது மகள் மீது ஒரு கண் இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த மாத தொடக்கத்தில் 18 வயது பெண் தனது தாயாருடன் உறங்கிக்கொண்டிருந்தபோது ராஜூ பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் உறக்கத்தில் இருந்து எழுந்த அந்தப் பெண் ராஜூவை கண்டபடி திட்டி இருக்கிறார். அதிலிருந்து ராஜூவை அந்தப் பெண் வெறுக்க ஆரம்பித்தார்.

கைது

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி ராஜூ 18 வயது பெண்ணை கொலை செய்துவிட்டு, அந்தப் பெண் அணிந்திருந்த கம்பல் மற்றும் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டார். தப்பிச்செல்லும் போது தன்னுடைய காதலி மற்றும் 18 வயது பெண்ணின் இரண்டு மொபைல் போன்களையும் எடுத்து சென்றுவிட்டார். அந்த போன்கள் தொடர்ந்து ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் என்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தேன். அப்போது ராஜூவுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன். என்னுடைய குழந்தைகளை கவனித்துக்கொள்வதாக ராஜூ தெரிவித்ததால் நான், நான் அவர்களை என்னுடன் அழைத்து வந்திருந்தேன். என்னுடைய 18 வயது மகளை சமீப காலமாக ராஜூ தவறான கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார். இரவில் கூட தகாத முறையில் நடந்து கொண்டார். சம்பவத்தன்று நான் வேலைக்கு புறப்பட்டேன். நான் வெளியில் செல்லும் போது போன் ஏன் எடுத்து செல்கிறாய் வீட்டில் வைத்துவிட்டு போ என்று கூறி ராஜூ என்னுடைய போனை வீட்டில் வைத்துவிட்டுபோகும்படி கேட்டுக்கொண்டார். நானும் போனை வீட்டில் வைத்துவிட்டு சென்றேன். வீட்டில் மகள்கள் இருந்தனர்.

கைதான நபர் ராஜு

வேலை முடிந்து வீடு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே என்னிடம் இருந்த சாவி மூலம் கதவை திறந்த போது என்னுடைய 18 வயது மகள் மயங்கிக்கிடந்தாள். அவளது கழுத்தில் காயம் இருந்தது. பக்கத்துவீட்டுக்காரரிடம் விசாரித்த போது ராஜூ அவசரமாக கதவை பூட்டிவிட்டு சென்றதாக தெரிவித்தார். உடனே எனது மகளை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றோம். ஆனால் அவள் ஏற்கனவே இறந்துவிட்டாள் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்'' என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், இது குறித்து பூந்தமல்லி காவல் நிலைய சீனியர் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் கூறுகையில், ``பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வில், இளம்பெண்ணை கொலை செய்த பிறகு பிணத்துடன் ராஜூ உறவு வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. எனவே கொலை வழக்குடன் பாலியல் வன்கொடுமை வழக்கும் சேர்த்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொலைக்கு பிறகு ராஜூ தொடர்ந்து தலைமறைவாக இருந்தான்.

ராஜூ தப்பிச்செல்லும் போது இரண்டு மொபைல் போன்களையும் திருடிச்சென்று இருந்தான். அந்த போன்கள் தொடர்ந்து ஆப் செய்யப்பட்டு இருந்தது. சமீபத்தில் அதில் ஒரு போன் ஆன் செய்யபட்டது. உடனே அவனது இருக்கும் இடம் தெரியவந்தது. மும்பை வீராரில் இருப்பதை கண்டுபிடித்தோம். தனிப்படை போலீஸார் சென்னையில் இருந்து சென்று மும்பை போலீஸாரின் துணையோடு ராஜூவை கைது செய்திருக்கிறோம். வீராரில் ராஜூவின் மனைவி வசிக்கிறார். அவரைத்தான் ராஜூதேடி வந்திருந்தான்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/yevtpkB

Post a Comment

0 Comments