மும்பை கடற்கரையில் காலை நேரத்தில் தண்ணீர் மட்டம் குறைவதும், மாலையில் அதிகரிப்பதுமாக இருக்கும். தண்ணீர் மட்டம் குறையும் போது கடற்கரையில் பொதுமக்கள் அதில் இருக்கும் பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் கடற்கரையில் அடிக்கடி பாறையில் அமர்ந்து காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கடல் நீர் மட்டம் திடீரென அதிகரிப்பதுண்டு.
அது போன்ற நேரங்களில் தீயணைப்பு துறையினர் வந்து அவர்களை மீட்டதுண்டு. இப்போது அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று ஒர்லி கடற்கரையில் குழந்தைகள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் கடல் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டிருந்தது. திடீரென ஒரு பெரிய அலை வந்து குழந்தைகள் மீது மோதியது. இதில் குழந்தைகள் கடல் நீரில் கீழே விழுந்தனர்.
அவர்கள் கடல் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த நேரம் இதை கவனித்த மகாதேவ் நாராயண் என்ற 79 வயது முதியவர் உடனே கடலில் குதித்து குழந்தைகளை காப்பாற்ற ஆரம்பித்தார். அவர் கடலில் குதித்து காப்பாற்ற ஆரம்பித்த பிறகு மற்றவர்களும் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். இதில் மூன்று குழந்தைகள் மட்டுமே காப்பாற்ற முடிந்தது. இரண்டு குழந்தைகள் கடலில் இழுத்துச்செல்லப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இந்தநிலையில், இது குறித்து சீனியர் இன்ஸ்பெக்டர் மகேஷ் கூறுகையில், ``கடலில் நீர்மட்டம் அதிகரித்துக்கொண்டிருந்த போது குழந்தைகள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். கடல் அலையில் 5 குழந்தைகள் இழுத்துச்செல்லப்பட்டனர். அவர்களை மகாதேவ் என்ற முதியவர் கடலில் குதித்து காப்பாற்றினார். அதில் இரண்டு பேர் இறந்துவிட்டனர்'' என்று தெரிவித்தார். குழந்தைகளை காப்பாற்றிய முதியவரை போலீஸாரும், அப்பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/NoVxE3w
0 Comments