உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன், பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த உடன் தனது அறையில், தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. அதைத் தொடர்ந்து, மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அந்தப் புகாரில், "எனது மகன் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த முறை பள்ளிக்கு நான் செலுத்த வேண்டிய பள்ளிக்கட்டணம் செலுத்த சற்றுத் தாமதமானது. அதனால், எனது மகனை வகுப்பில் துன்புறுத்தியிருக்கிறார்கள். மேலும், அவனை வகுப்பினுள் அனுமதிக்கவில்லை. அதனால், அவமானப்படுத்தப்பட்ட எனது மகன் தற்கொலை செய்துக்கொண்டார். எனது மகனின் மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தப் புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகம், "தற்கொலை செய்துக்கொண்ட மாணவனுக்கும் அவனது வகுப்பு தோழனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதற்காக அவர்களின் பெற்றோரை பேசுவதற்காக அழைத்தோம். இறந்த மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு வரவில்லை. அதனால் நேற்று அவரது தந்தையை கண்டிப்பாக அழைத்து வரக் கூறினோம்.
அதனால் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா எனத் தெரியவில்லை" எனக் கூறியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. பள்ளி ஊழியர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/eOqTV3X
0 Comments