உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள கௌல்கா கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியைப் பட்டப்பகலில் 15 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, சிறுமியின் தந்தை நவல் சிங் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில், ``பட்டப்பகலில் வீட்டிலிருந்த என் மகளை 15 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. அவர்கள் அனைவரும் சுவர் மீது ஒருவர் பின் ஒருவராக ஏறி என் வீட்டைத் தாக்கினார்கள். கண்முன்னே என் மகளை கடத்திச் சென்றனர்'' எனக் கூறியிருக்கிறார்.
மேலும் இது குறித்து சிறுமியின் தாயார், ``இந்தக் கும்பல் எங்கள் வீட்டைத் தாக்கிய நேரத்தில், எங்கள் உறவினர்கள் அனைவரும் எங்களுக்கு உதவ உள்ளே வந்தனர். ஆனால் அந்தக் கும்பல் வலுக்கட்டாயமாக என் மகளைக் கடத்திச் சென்றுவிட்டது'' என்றார்.
இந்தச் சம்பவம் நடந்தபோது, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்திருக்கின்றனர். சிறுமி கடத்தப்பட்டதை அங்கிருந்த யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது அந்தச் சிறுமி மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம், ``இந்தச் சம்பவம் கடந்த அக்டோபர் 26-ம் தேதி நடந்தது. புகாரின் பேரில் குற்றவாளிகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சிறுமி பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான முழுமையான விசாரணைக்காக ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம். கண்டிப்பாகக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/baopPR7
0 Comments