``என் மனைவி ரூ.10 கோடி பணம் கேட்டு என்னை மிரட்டுகிறார்!" - காங்கிரஸ் எம்.எல்.ஏ போலீஸில் புகார்

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் உமாங் சிங்கார். தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் இவர், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜமுனா தேவியின் மருமகன் ஆவார். முந்தைய கமல்நாத் அரசில் வனத்துறை அமைச்சராக இருந்த இவர், தற்போது கந்த்வானி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

குடும்ப வன்முறை

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார், `ரூ.10 கோடி பணம் கேட்டு, என்னை என்னுடைய மனைவி மிரட்டுகிறார்!' என போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

பதிலுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார் தன்னை பாலியல் வன்கொடுமைசெய்வதாகவும், தன்னிடம் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும் கூறி அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக எம்.எல்.ஏ-வின் மனைவி, ``என்னுடைய கணவர் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார். மேலும், எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணின் கணவர் பெயரில் என் கணவர் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார். கடந்த வருடம் போபாலில், என் கணவரின் லிவ்-இன் பார்ட்னர் சோனியா பரத்வாஜ் தற்கொலை செய்துகொண்டார். அதில் இவருக்குத் தொடர்பிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார்

இந்த நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார் செய்தியாளர்களிடம், ``கடந்த 2-ம் தேதி என் மனைவி என்னை மனரீதியாக துன்புறுத்துவதாகவும், மிரட்டுவதாகவும் அவர்மீது போலீஸில் புகார் அளித்தேன். அதற்காக அவர் என்னை பொய் வழக்கில் சிக்கவைப்பதாக மிரட்டினார். மேலும், ரூ.10 கோடி பணமும் கேட்டார்'' என்றார். மேலும் அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ``முன்னாள் அமைச்சர் உமாங் சிங்கார் தன்னை பாலியல் வன்கொடுமைசெய்ததாக அவருடைய மனைவி குற்றம்சாட்டியிருக்கிறார். காவல்துறை அது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது" என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/M7QdkDc

Post a Comment

0 Comments