தீபாவளிக்கு இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பட்டாசு விற்பனை இருந்தது. இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் இருந்தாலும் பலரும் அதைப்பற்றி கவலைப்படாமல் நள்ளிரவு வரை பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் தங்களது தீபாவளியை கொண்டாடினர். மும்பையில் அது போன்று ஒருவர் தீபாவளியை கொண்டாடும் போது ராக்கெட் பட்டாசை அடுத்தவர்கள் மீது விட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரில் வாலிபர் ஒருவர் அடுக்கு மாடி கட்டடம் ஒன்றின் கீழ் தளத்தில் நின்று கொண்டு ராக்கெட் பட்டாசை கொளுத்தி அடுக்கு மாடி கட்டடத்தில் வசிப்பவர்கள் வீட்டை நோக்கி விட்டார். இதில் சில ராக்கெட் பட்டாசுகள் நேராக அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்தவர்களின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் போய் தாக்கியது. பட்டாசு பாக்ஸ் ஒன்றில் இருந்து ஒரே நேரத்தில் ஏராளமான ராக்கெட் பட்டாசுகளை(ஷாட்ஸ் வகை பட்டாசுகள்) அந்த வாலிபர் செலுத்தியதால் அக்கட்டடத்தில் வசித்தவர்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்து யார் இந்த வேலையை பார்ப்பது என்று பார்த்தனர். ராக்கெட் வீட்டின் ஜன்னல் மற்றும் பால்கனியை சென்று தாக்கியது.
கீழே ஒருவர் கையில் ஷாட்ஸ் ரக பட்டாசுகளை வைத்துக்கொண்டு மாடி வீடுகளை நோக்கி ராக்கெட்களை அனுப்பிக்கொண்டிருந்தார். அதனை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. ராக்கெட் பட்டாசுகளால் அச்சம் அடைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராக்கெட் பட்டாசு விட்டது யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது தவிர பட்டாசு சம்பவத்தால் தானேயில் 11 இடத்தில் தீவிபத்து சம்பவங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/C0L1RMi
0 Comments