நம்மில் பலர் வருமானம் தொடர்பான விவரங்களைப் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால் கணவன் மனைவிக்குள் விவாகரத்து பெற நேர்ந்தால் கணவரிடம் இருந்து மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையையோ அல்லது சொத்தில் பங்கோ கொடுக்க வேண்டி வரும். இதனால் கணவர் பொருளாதார ரீதியிலும் சிக்கலை சந்திக்க நேரிடும். அப்படியான சூழலில் கணவர் தன்னுடைய வருமானம் தொடர்பான விவரங்களை கொடுக்க மறுத்தால் மனைவி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அதனை தெரிந்து கொள்ள வழிவகை உண்டு.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சு குப்தா என்பவருக்கும், அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து சஞ்சு குப்தா 2018- 2019 மற்றும் 2019 -2020 ஆகிய நிதியாண்டுகளில் தன்னுடைய கணவரின் வருமானம் என்ன என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தியிருக்கிறார்.
ஆனால், அவர் கணவர் தன்னுடைய வருமானம் தொடர்பான விவரங்களை தன் மனைவிக்கு அளிக்க விருப்பம் இல்லை எனக் கூறியதாகத் தெரிகிறது. அதனால், பரேலியிலுள்ள மத்திய பொது தகவல் மையம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் அந்தப் பெண் கேட்ட தகவலை கொடுக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து சஞ்சு குப்தா மேல்முறையீட்டு ஆணையத்திடம் தன்னுடைய கணவரின் வருமான விவரங்களைக் கேட்டு மேல் முறையீடு செய்திருக்கிறார். ஆனால் மத்திய பொது தகவல் அலுவலரின் உத்தரவு செல்லும் என மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து மீண்டும் மத்திய தகவல் மையத்தில் சஞ்சய் குப்தா மேல்முறையீடு செய்திருக்கிறார். அப்போது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற ஆணைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு 15 நாள்களுக்குள் சஞ்சு குப்தா கணவரின் வருமானம் தொடர்பான விவரங்களை வருமான வரித்துறையும், மத்திய பொது தகவல் அலுவலரும் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/bIEYt81
0 Comments