ஜெயின் கோயிலில் திருட்டுப்போன பொருள்கள்; மன்னிப்புக் கடிதத்துடன் திருப்பிக் கொடுத்த திருடன்

மத்தியப் பிரதேச மாநிலம், பாலகாட் மாவட்டத்திலுள்ள சாந்திநாத் திகம்பர் ஜெயின் கோயிலிலிருந்து அக்டோபர் 24-ம் தேதி, 'சத்திரஸ்' எனும் குடை வடிவ அலங்காரப்பொருள் உட்பட 10 அலங்கார வெள்ளிப் பொருள்கள், மூன்று பித்தளைப் பொருள்கள் காணாமல் போயின. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. காவல்துறையினரும் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.

போலீஸ்

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், லாம்டா பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகிலுள்ள குழியில், ஒரு பை கிடப்பதைப் பார்த்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கு அந்தப் பை தொடர்பாகத் தெரிவித்திருக்கிறார். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், அந்தப் பையைச் சோதனை செய்தனர். அதில், ஜெயின் கோயிலில் திருடப்பட்ட பொருள்கள் அனைத்தும் இருந்திருக்கின்றன.

ஜெயின் கோயில்

மேலும், அதில் ஒரு கடிதமும் இருந்திருக்கிறது. அந்தக் கடிதத்தில், "என்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கேட்கிறேன். திருட்டுக்குப் பிறகு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் தவறு செய்துவிட்டேன், என்னை மன்னியுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி விஜய் தாபர், ``திருடுப்போன பொருள்கள் கிடைத்துவிட்டன. ஆனாலும், குற்றவாளியைத் தேடிவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/yDHtsV6

Post a Comment

0 Comments