மும்பையின் மேற்கு பகுதியில் கோரேகாவ் முதல் போரிவலி வரை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா இருக்கிறது. இந்த தேசிய பூங்கா என்பது அடர்ந்த காடுகள் அடங்கிய பகுதியாகும். இதில் கோரேகாவ் ஆரேகாலனி போன்ற சில இடங்களில் வனப்பகுதியில் மனிதர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதனால் அடிக்கடி சிறுத்தைகள் மனித குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்துவிடுவதுண்டு.
கடந்த திங்கள் கிழமை கோரேகாவ் பிலிம் சிட்டி அருகில் சிறுத்தை குட்டி ஒன்று அதன் தாயிடமிருந்து விலகி வந்துவிட்டது. அந்த சிறுத்தை குட்டியை நாய்கள் கடிக்க ஆரம்பித்தது. அதனை வனத்துறைனர் மீட்டு மருத்துவ உதவி அளித்து வந்தனர். குட்டி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அதனை மீண்டும் அதன் தாயோடு சேர்த்து வைக்க வனத்துறை ஊழிகள் கடந்த சில நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
சிறுத்தை குட்டியை அடர்ந்த காட்டிற்குள் கூண்டுக்குள் வைத்துவிட்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இரவு முழுவதும் காத்துக்கொண்டிருந்தனர். நேற்றும் வழக்கம் போல் சிறுத்தை குட்டியை கூண்டில் வைத்துவிட்டு ஊழியர்கள் தூரத்தில் இருந்து இரவு முழுவதும் கண் காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்துக்கொண்டே இருந்தனர். அதிகாலை 3.30 மணிக்கு சிறுத்தை மெதுவாக கூண்டை நோக்கி வந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் கூண்டை திறந்துவிட்டனர். கூண்டை திறந்துவிட்டவுடன் குட்டி தனது தாயை பார்த்து வெளியில் வந்தது.
தனது குட்டியை சிறுத்தை வாயில் கவ்வியபடி அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்தது. சிறுத்தையை அதன் குட்டியோடு சேர்க்க வனத்துறை ஊழியர்கள் மட்டுமல்லாது பிலிம் சிட்டியில் வேலை செய்த ஏராளமான ஊழியர்களும் தாங்களாக முன் வந்து தேவையான உதவிகளை செய்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் வனத்துறையினர் சிறுத்தை குட்டிகள் மழையில் நனையக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் மூலம் நிழல்களை அமைத்திருக்கின்றனர். மும்பையின் மையப்பகுதியில் சிறுத்தைகளோடு மனிதர்கள் வாழ்வது இங்கு மட்டும்தான். இதனால் மக்கள் எப்போது ஒரு வித அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பால்பண்ணையில் அதிக அளவில் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/5K60Ukq
0 Comments